என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் ஒவ்வொரு மாதத்தின் இறுதியில் சமூகவலைத்தளத்தின் மூலம் தனது ரசிகர்களுடன் உரையாடுவார், அவர்களின் கேள்விகளுக்கு சுவையாக பதில் அளிப்பார். அந்த வகையில் இந்த மாத்திற்கான கலந்துரையாடலில் அவர் கூறியதாவது:
நான் இன்று வரை தொடர்ந்து கடைபிடித்து வரும் விஷயம் இதுதான். நான் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்தின் முழு பின்னணியும், அதன் சித்தாந்தத்தையும் எழுத வேண்டும் என விரும்புகிறேன். சில தருணங்களில் அதனை இயக்குநர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். சில தருணங்களில் எனக்குள் தோன்றிய விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் எனக்குள்ளேயே வைத்துக் கொண்டிருக்கிறேன். அது ஒரு கவிதையாகவோ அல்லது முழு கதையாக கூட இருக்கலாம்.
ஜவான் படம் வெளியீட்டிற்கு முழுமையாக தயார் நிலையில் உள்ளது. நான் தியேட்டரில் சென்று படம் பார்த்து மகிழ்ந்த இளமை காலத்தை போன்ற அனுபவத்தை ஜவான் உங்களுக்கு தரும். சரியான நேரத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கும், பெறுவதற்கும் பொக்கிஷம் போல் தயாராக இருக்கிறது. என்றார்.
இந்த உரையாடலின் போது ரசிகர் ஒருவர் “எனக்கு பிறக்கப்போகும் இரட்டை குழந்தைகளுக்கு ஜவான், பதான் என்ற பெயர் வைக்க திட்டமிட்டிருக்கிறேன்” என்றார். இதற்கு பதில் அளித்த ஷாருக்கான் “உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் எனது வாழ்த்துக்கள். உங்கள் குழந்தைக்கு வேறு ஏதாவது சிறப்பான பெயரை வைக்கலாம்” என்றார்.