‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா |
விடுதலை படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாக பணிகளில் தற்போது ஈடுபட்டிருக்கிறார் வெற்றிமாறன். வாடிவாசல் என்ற படத்தில் சூர்யாவும், வெற்றிமாறனும் இணைய இருப்பதாக கடந்த 2020 ஆம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. அதையடுத்து அப்படத்துக்கான டெஸ்ட் சூட் ஒன்று நடத்தப்பட்டது. அதில் ஜல்லிக்கட்டு வீரர்களுடன் களமிறங்கும் சூர்யா காளையுடன் மல்லுக்கட்டும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அதை சூர்யாவின் கடந்த ஆண்டு பிறந்த நாளின் போது வெளியிட்டார்கள். அதன்பிறகு அப்படம் குறித்த எந்த அப்டேட்களும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெற்றிமாறனிடத்தில் வாடிவாசல் படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அதில், தற்போது வாடிவாசல் பாடத்தின் அனிமேட்ரானிக்ஸ் வேலைகள் லண்டனில் நடைபெற்று வருகிறது. அதனால் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் முடிந்ததும் வாடிவாசல் படம் தொடங்கப்படும். தற்போது சூர்யா பயிற்சி எடுத்து வரும் ஜல்லிக்கட்டு காளை போன்று, ரோபோ காளை ஒன்றையும் தான் உருவாக்கி வருவதாகவும், அதற்கான வேலைகள் நடப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் வெற்றிமாறன்.
அதனால் விடுதலை-2 படத்திற்கு பிறகு சூர்யா- வெற்றிமாறன் இணையும் வாடிவாசல் படம் தொடங்கப்படும் என்பது தற்போது உறுதியாகி இருக்கிறது. மேலும் இதே நிகழ்வில் பேசிய வெற்றிமாறன், ‛‛நிச்சயம் வட சென்னை 2 படம் உருவாகும். அதேப்போன்று வாய்ப்பு அமையும் போது நிச்சயம் விஜய்யை வைத்து படம் இயக்குவேன்'' என்றார்.