மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
நடிகர் சதீஷ் ‛வித்தைக்காரன்' படத்தில் நடிப்பதற்காக கோவை சென்றார். கோவை பேரூர் பகுதியில் உள்ள சேரன் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சதீஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: படிக்கும்போது எந்த விதமான தவறான விஷயத்திலும் ஈடுபட வேண்டாம். மது, புகைபழக்கம் உள்ளிட்டவை உடல்நலத்தை கெடுப்பதோடு, கல்வியையும் கெடுக்கும். ஆசிரியர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்; நாங்கள் படிக்கும்போது ஆசிரியருக்கு பயப்படுவோம், இப்போது உள்டாவாக மாறிவிட்டது. நிறைய வீடியோக்களில் மாணவர்கள் தகாத வார்த்தைகள் பேசுவதை பார்க்கும் போது வேதனையளிக்கிறது.
நாய்சேகர் படத்திற்கு பிறகு ‛சட்டம் என் கையில்' என்ற படத்தை முடித்துள்ளோம்; அது ஒரு நல்ல திரில்லர் படமாக இருக்கும். லோகேஷ் கனகராஜின் இணை இயக்குனர் வெங்கி இயக்கும் வித்தைக்காரன் படம் அடுத்த வெளியீடாக இருக்கும். அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளது. ஓடிடி மிகப்பெரிய வளர்ச்சியாக இருக்கிறது, நல்ல தொழிலாகவும் இருக்கிறது. தியேட்டர் ரெஸ்பான்ஸ் நன்றாக இருக்கும்.
திரைபட்டங்களில் உள்ள விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள். சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும். தேவர் மகன் திரைப்படம் தனக்கு மிகவும் படித்த படம் , இறுதியில் வரும் வன்முறை வேண்டாம், சாதி, மதங்களை பார்க்காமல் குழந்தைகளை படிக்க வையுங்கடா என்ற நல்ல கருத்தை மட்டும் அதில் நான் எடுத்துக்கொள்வேன். இவ்வாறு அவர் பேசினார்.