இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகன் உட்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் தங்கலான். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படம் 1990 காலகட்ட கதையில் உருவாகி வருகிறது. கே ஜி எப் உருவாவதற்கு முன்பே அந்த கேஜிஎப் நிலத்தில் தங்கத்தை தோண்டி எடுத்த மக்களைப் பற்றிய கதையில் தங்கலான் உருவாகிறது. குறிப்பாக, பழங்குடியின மக்களின் வாழ்வியல் மற்றும் கலாச்சாரத்தை இந்த படம் சொல்லப்போகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த போது நடிகர் விக்ரமின் விலா எலும்பில் முறிவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த படத்தில் நடித்து வரும் பார்வதி ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில், ‛காதல், பணம், புகழைத் தவிர எனக்கு உண்மையை தாருங்கள். தங்கலான் படத்தில் நான் நடிக்கும் கதாபாத்திரத்துக்காக சென்ற இடங்கள், நான் தேர்ந்தெடுத்த விஷயங்கள் அனைத்தும் எனக்குள் எழுப்பி வைத்திருந்த சுவர், முகத்திரைகளை சுக்கு நூறாக உடைத்துள்ளது. கடைசியில் உண்மை மட்டுமே பிரதிபலித்தது. இந்த தங்கலான் எனது கேரியரில் மிக முக்கியமான திருப்பத்தை கொடுக்கக்கூடிய படமாக அமைந்துள்ளது' என்று பதிவிட்டு இருக்கிறார் பார்வதி.