குட் பேட் அக்லி ஓடிடி-யில் வெளியாவது எப்போது | சூரி படத்துக்கு ஓடிடி-யில் இழுபறி | ஓடிடி நிறுவனங்களுக்கு திரையரங்க உரிமையாளர்கள் வைக்கும் செக் | இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா |
கமல் நடித்த விக்ரம் படத்தை அடுத்து தற்போது விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். விஜய்யுடன் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. இப்படத்தை அடுத்து கார்த்தி நடிப்பில் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது லியோ படத்தை அடுத்து பிரபாஸ் நடிக்கும் படத்தை அவர் இயக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று விட்டதாகவும், லியோ படம் திரைக்கு வந்ததும் அப்படத்தின் ஆரம்ப கட்டப் பணிகளை தொடங்குவதற்கு லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.