டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் தமிழில் மூட்டை கட்டிய காஜல் | பிளாஷ்பேக்: அப்பாவின் நண்பருக்காக மேடையில் ஆடிய சிறுவன் கமல் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் பலர் நடிக்கும் படம் 'லியோ'. அக்டோபரில் இப்படம் வெளியாக உள்ளது. இன்று(ஜூன் 22) விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு இந்த படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டனர். அதில் பனிமலை பின்னணியில் விஜய் ஆவேசத்துடன் சுத்தியலால் யாரையோ அடித்துத் தாக்குவதும், அருகே ஓநாய் ஒன்றும் கடும் கோபத்துடன் இருப்பது போன்று அந்த போஸ்டரை வடிவமைத்து இருந்தனர்.
முன்னதாக இரு தினங்களுக்கு முன் இந்த படத்தின் முதல் சிங்கிளான 'நா ரெடி' பாடலின் முன்னோட்டத்தை வெளியிட்டனர். “நா ரெடி தா வரவா, அண்ணன் நா எறங்கி வரவா… என்ற அந்த நான்கு வரிகளிலேயே அரசியல் கலந்த வரிகளாக இருந்து பாடல் மீதான எதிர்பார்ப்பை தூண்டியது. இந்நிலையில் இன்று மாலை 6:30 மணியளவில் இப்படத்தின் முதல் சிங்கிளான 'நா ரெடி' பாடலை வெளியிட்டனர். 4:14 நிமிடங்கள் ஒலிக்கும் இந்த பாடலை விஷ்ணு எழுத நடிகர் விஜய்யே பாடி உள்ளார். அவருடன் அனிருத் மற்றும் பிக்பாஸ் அசல் கோலாரும் இடையிடையே குரல் கொடுத்துள்ளார்.
துள்ளல் பாடலாக வெளியாகி உள்ள இதில் விஜய் உடன் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களும் ஆடி உள்ளனர். நடிகர் விஜய் எதிர்காலத்தில் அரசியலுக்கு வர உள்ள நிலையில் அதை வெளிப்படுத்தும் விதமான பாடல் வரிகள் அமைந்துள்ளன. அதோடு சரக்கு, அசைவ உணவு தொடர்பான வரிகளும் கலந்து கட்டி கொண்டாட்ட பாடலாக வெளியிட்டுள்ளனர்.
பாடல் வெளியான 15 நிமிடத்திலேயே 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 3.60 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களையும் பெற்றது.