தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஹாலிவுட்டிலும் கால் பதித்துவிட்டார் நடிகர் தனுஷ். தற்போது தமிழில் ‛கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதுதவிர அவர் கைவசம் அடுத்தடுத்து நிறைய படங்கள் உள்ளன.
இந்நிலையில் அவரின் அடுத்த ஹிந்தி பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ‛தேரே இஷ்க் மெயின்' என பெயரிட்டு, முன்னோட்ட வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதை ஆனந்த் எல் ராய் இயக்குகிறார். தனுஷ் உடன் இவர் இணையும் மூன்றாவது ஹிந்தி படம் இதுவாகும். இதற்கு ‛ராஞ்சனா மற்றும் அட்ரங்கி ரே' ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றினர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட முன்னோட்ட வீடியோவில் வாயில் சிகரெட் பிடித்தபடி ஆக்ரோஷமாக ஓடி வரும் தனுஷ் கையில் வைத்துள்ள பெட்ரோல் குண்டை சுவற்றில் எழுதப்பட்டுள்ள ‛ராஞ்சனா' பெயரில் தூக்கி எரிகிறார். அதன்பின் பற்றி எரியும் அந்த நெருப்பில் இருந்து ‛தேரே இஷ்க் மெயின்' என்ற பட பெயர் அறிவிப்பு வருகிறது.
இப்படம் பற்றி தனுஷ் வெளியிட்ட அறிவிப்பில், ‛‛ராஞ்சனா 10 ஆண்டுகள்.... சில படங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றியதை மறக்க முடியாது. அப்படி ஒரு படம் தான் இது. இந்தப்படம் எங்கள் எல்லோரின் வாழ்க்கையையும் மாற்றியது. கிளாசிக் படமான ராஞ்சனாவை உருவாக்க உதவிய அத்தனை பேருக்கும் என் நன்றி. 10 ஆண்டுகளுக்கு பின் ராஞ்சனா உலகத்தில் இருந்து மற்றொரு கதை தேரே இஷ்க் மெயின். இது எந்த மாதிரியான பயணமாக இருக்க போகிறது என தெரியவில்லை. காத்திருக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக கூறுகிறேன். இது சாகசமாக இருக்க போகிறது. நன்றி
ஹர ஹர மஹாதேவ்!
இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.