மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ் | 200 படங்களை கடந்த 2025 | ரிலீசுக்கு முன்பே லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த காந்தாரா சாப்டர் 1 | முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி | அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி | ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா : அரசியல் பேசப்படுமா? அடக்கி வாசிக்கப்படுமா? | சின்ன வயது கஷ்டங்களை சொல்லும் தனுஷ் | கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ஜாக்கி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அர்ச்சனா | பிளாஷ்பேக்: சினிமாவான முதல் உண்மை சம்பவம் |
ஒவ்வொரு குழந்தையின் முதல் ஹீரோ அவர்களின் தந்தை தான். கை பிடித்து நடக்கக் கற்றுக் கொடுத்து, வாழ கற்றுக் கொடுத்து குழந்தைகள் வாழ்வில் முன்னேறுவதை பார்த்து மகிழ்ச்சி அடையும் ஜீவன் தந்தை. அத்தகைய தந்தைகளை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3வது ஞாயிறு கிழமை, தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான தந்தையர் தினம், இன்று (ஜூன் 18) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நடிகர் விஜயகாந்த்-ன் மகன்கள் சண்முகபாண்டியன், விஜயபிரபாகரன் இருவரும் தங்களது தந்தை விஜயகாந்த் உடன் தந்தையர் தினத்தை கொண்டாடும் வகையிலான போட்டோவை தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.