விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'எந்திரன்' படம் 2010ம் ஆண்டு வெளிவந்தது. இதில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய், சந்தானம், கருணாஸ், கொச்சின் அனீபா, கலாபவன் மணி உள்பட பலர் நடித்திருந்தார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். ரத்தினவேலு ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான 'ரோபோ' படத்தின் இன்ஸ்பிரஷனில் உருவாகி இருந்தது.
இந்த படத்தின் கதை என்னுடையது என்று ஆரூர் தமிழ்நாடன் என்ற எழுத்தாளர் வழக்கு தொடர்ந்தார். 1996ம் ஆண்டு 'இனிய உதயம்' என்ற மாதஇதழில் தான் எழுதிய 'திக் திக் தீபிகா' என்கிற கதையைத்தான் ஷங்கர் 'எந்திரன்' படமாக எடுத்துள்ளார் என்று தனது வழக்கு மனுவில் அவர் தெரிவித்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கை தற்போது நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 'திக் திக் தீபிகா' கதையும், 'எந்திரன்' கதையும் ஒன்றல்ல, எனவே காப்புரிமை சட்டப்படி இதில் நடவடிக்கை எடுக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்து விட்டது.