15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் |
இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட தளங்களில் முன்னணி நடிகைகள் ஒரு பதிவு போட்டால் அதற்கு லட்சக் கணக்கில் லைக்குகள் குவியும். சிலர் கிளாமரான புகைப்படங்களைப் பதிவிட்டால் அதற்கு இருபது லட்சம் லைக்குகள் கூட கிடைக்கும்.
ரசிகர்கள், ரசிகைகள் எதற்காக அப்படி லைக்குகளைக் கொடுப்பார்கள் என்பது தெரியாது. நேற்று நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு மாம்பழத்தை சாப்பிடும் குட்டி வீடியோவிற்கு ஒன்பது லட்சம் லைக்குகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
“சீசன் முடிவதற்குள் பண்டூரி மாம்பழங்களைச் சாப்பிடுங்கள்,” எனக் குறிப்பிட்டு அந்த வீடியோவைப் பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். மாம்பழத்தை அவர் ருசித்து சாப்பிடுவதைப் பார்த்து ரசித்து லைக்குளைப் போட்டுவிட்டார்கள் போலும்.
தமிழில் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்துள்ள 'மாமன்னன்' படம் இந்த மாதக் கடைசியில் வெளியாக உள்ளது.