வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
அஜித் நடித்த வாலி படத்தில் இயக்குனர் ஆனவர் எஸ்.ஜே.சூர்யா. அதன் பிறகு விஜய் நடித்த குஷி படத்தை இயக்கியவர் பின்னர் அன்பே ஆருயிரே படத்தில் அவரே ஹீரோவும் ஆகிவிட்டார். சமீபகாலமாக ஹீரோ, வில்லன் என வலம் வந்து கொண்டிருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. மாநாடு படத்தின் ஹிட்டுக்கு பிறகு ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர், விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி, கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ஜிகர்தண்டா 2 ஆகிய படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். அதோடு இந்தியன் 2 படத்திலும் அவர் வில்லனாக நடித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்தநிலையில் தற்போது ராதா மோகன் இயக்கத்தில் தான் நடித்துள்ள பொம்மை படம் நாளை 16-ம் தேதி திரைக்கும் நிலையில் மீடியாக்களுக்கு பேட்டி அளித்து வருகிறார் எஸ். ஜே. சூர்யா. அப்போது அவர் கூறுகையில், ஏற்கனவே சிம்பு நடிப்பில் ஏசி என்ற ஒரு படத்தை நான் இயக்குவதாக இருந்தது. அந்த படம் அப்போது கைவிடப்பட்டது . அதில் சிம்பு கேங்ஸ்டராகவும், பசு வளர்ப்பவராகவும் இரண்டு வேடங்களில் நடிக்க இருந்தார். அது ஒரு ஜாலியான படம். அந்த கதை குறித்து மாநாடு படத்தில் நடித்தபோது மீண்டும் சிம்புவுடன் விவாதித்தேன். அதனால் சரியான சந்தர்ப்பம் அமையும் போது அப்படத்தை சிம்புவை வைத்து இயக்குவேன் என்று தெரிவித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.