இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
ரோஜா தொடரின் மூலம் பிரபலமான ப்ரியங்கா நல்காரிக்கு தமிழ் சின்னத்திரையில் அதிக ரசிகர்கள் உள்ளனர். ரோஜா சீரியல் முடிந்தவுடன் அவர் அடுத்ததாக எந்த சீரியலில் நடிக்கப் போகிறார் என்பதை ஆர்வத்துடன் எதிர்பார்த்து வந்தனர். ப்ரியங்காவும் ஜீ தமிழில் சீதா ராமன் தொடரில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்திருந்தார். இதற்கிடையில், தனது நீண்ட நாள் காதலர் ராகுல் வர்மாவை திடீரென திருமணம் செய்து கொண்ட ப்ரியங்கா, திருமணத்திற்கு பிறகும் சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால், சில நாட்களுக்கு முன் கணவருக்காக சீதா ராமன் தொடரிலிருந்து விரைவில் வெளியேற இருப்பதாக திடீரென அறிவித்தார். இந்நிலையில், நேற்றைய தினம் 'கடைசி சீதா மேக்கப்' என்ற குறிப்பிட்டு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். சக நடிகரான ஜே டிசவுசாவும் 'சீதாவுடன் கடைசி காட்சி' என்று போட்டோவை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் மனமுடைந்துள்ளனர். ப்ரியங்காவை மீண்டும் நடிக்க சொல்லி சோஷியல் மீடியா பதிவுகளில் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.