அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
“சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு” ஆகிய படங்களை இயக்கிய எச் வினோத் அடுத்து கமல்ஹாசன் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவதாக கடந்த சில பல மாதங்களாகவே செய்திகள் வந்து கொண்டிருந்தன. 'இந்தியன் 2' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் கமல், அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ள கமல்ஹாசனின் 234வது படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. அதனால், வினோத் இயக்கும் படத்தில் கமல் நடிக்கிறாரா இல்லையா என்ற குழப்பம் நிலவியது.
இதனிடையே நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய விவசாயிகளை கமல்ஹாசன், எச் வினோத் நேற்று கமல்ஹாசனின் சென்னை, ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் சந்தித்தனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் ஜுன் 17, 18 தேதிகளில் 2023ம் ஆண்டிற்கான தேசிய நெல் திருவிழாவில் கலந்து கொள்ள கமல்ஹாசனை விவசாயிகள் அழைத்துள்ளனர். அப்போது அவர்களிடம் பேசிய கமல்ஹாசன் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க விவசாயிகளுக்கு எப்போதும் துணையாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.
கமல்ஹாசன், எச் வினோத் இந்த சந்திப்பில் சேர்ந்து கலந்து கொண்டதால் இருவரும் இணைய உள்ள கமல்ஹாசனின் 233வது படம் விவசாயம் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பதற்கு முன்பு குறுகிய காலத் தயாரிப்பாக இப்படம் இருக்கலாம் என்கிறார்கள்.