ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

ஷங்கர் இயக்கிவரும் இந்தியன் 2 திரைப்படத்தின் இறுதிக்கட்ட படபிடிப்பு தற்போது நடைபெற்ற வருகிறது. சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், டெல்லி கனேஷ், சமுத்திரகனி, குரு சோமசுந்தரம், விவேக், பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து வருவதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தது. தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கமலுடன் எஸ்.ஜே.சூர்யா படப்பிடிப்பு தளத்தில் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்தியன் முதல் பாகத்தில் இவர்தான் வில்லன் என்று யாரும் தனியாக கிடையாது. டிராபிக் கான்ஸ்டபிளில் இருந்து சொந்த மகன் வரை வில்லன்களாக இருந்தார்கள்.
இந்த படத்தில் ஒரே வில்லன்தான் மெயின், அந்த வில்லனை சார்ந்த பலர் அடுத்தகட்ட வில்லன்கள் இருக்கிறார்கள். அந்த மெயின்வில்லன் கேரக்டரில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். கார்பரேட் நிறுவனத்தின் அதிபராக அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. மாநாடு, ஸ்பைடர், வாரிசு உள்ளிட்ட பல படங்களில் எஸ்.ஜே.சூர்யா ஏற்கெனவே வில்லனாக நடித்திருக்கிறார்.




