நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
இயக்குனர் ஜூயிட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ், குச்சக்க கோபன்,அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த திரைப்படம் 2018. 2018ல் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தை காவ்யா பிலிம் கம்பெனி மற்றும் பிகே பிரைம் புரொடக்சன்ஸ் இணைத்து தயாரித்துள்ளனர். ஏற்கனவே இப்படம் உலகளவில் ரூ.160 கோடிக்கு மேல் வசூலித்து மலையாள சினிமாவில் அதிக வசூல் பெற்ற படமாக மாறியுள்ளது.
இந்த நிலையில் மற்றொரு புதிய சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது. இந்த படம் கேரளா மாநிலத்தில் மட்டும் ரூ.85 கோடியை கடந்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 7 வருடங்களாக ரூ.84 கோடி வசூலித்த புலிமுருகன் படத்தின் வசூலை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது 2018 திரைப்படம்.