டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை |

கடந்த 2015ம் ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் பாகுபலி. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்த படத்தின் இரண்டு பாகங்களும் 700 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக இந்த பாகுபலி படத்தின் முதல் பாகம் 600 கோடியும், இரண்டாம் பாகம் 1700 கோடியும் வசூல் செய்தது. இந்த நிலையில் பாகுபலி படத்தின் இரண்டு பாகத்திலும் வில்லனாக நடித்த தெலுங்கு நடிகர் ராணா ஒரு பேட்டியில் பாகுபலி படத்தை தயாரிக்க 400 கோடி ரூபாய் வட்டிக்கு வாங்கப்பட்டதாக கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தயாரிப்பாளர்கள் தங்களது வீட்டையோ அல்லது சொத்தையோ வங்கியில் அடமானம் வைத்து தான் படம் எடுத்தார்கள். இதற்கு 24 முதல் 28 சதவீதம் வரை வட்டி செலுத்தினார்கள். அப்படித்தான் பாகுபலி படத்தின் தயாரிப்பாளர் 180 கோடி ரூபாய் கடன் வாங்கினார். அந்த படம் ஐந்தரை வருடங்கள் எடுக்கப்பட்டது. அதன் பிறகு 24 சதவீதம் வட்டியும் சேர்த்து இந்த படத்தை வங்கியில் செலுத்தினார். அந்த வகையில் பாகுபலி படத்திற்கு 300 முதல் 400 கோடி ரூபாய் கடன் வாங்கி எடுத்தார்கள். ஒருவேளை இந்த படம் வெற்றி பெறாவிட்டால் தயாரிப்பாளரின் நிலை என்னவாகி இருக்கும்? என்றாலும் அதைப்பற்றி எல்லாம் யோசிக்காமல் கண்டிப்பாக இந்த படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் அந்த படத்தை எடுத்தார் தயாரிப்பாளர் என்று தெரிவித்துள்ளார் ராணா.




