இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி இதோ | 125 கோடியில் உருவாகும் சம்பரலா ஏடிக்கட்டு | கல்கி 2ம் பாகத்தில் தீபிகா இல்லை: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு | தங்கை என அழைத்து என் இதயத்தை நொறுக்கினார் : அஜித் மீதான கிரஷ் குறித்து நடிகை மகேஸ்வரி | பிளாஷ்பேக்: ரஜினி பட கிளைமாக்சை மாற்றிய ஏவிஎம் சரவணன் | பிளாஷ்பேக்: பண்டரிபாயை தெரியும், மைனாவதியை தெரியுமா? | சவுந்தர்யாவுடன் சேர்ந்து நானும் போயிருக்க வேண்டியது : மீனா பகிர்ந்த புதிய தகவல் | நான் சிறுவனாக இருந்தபோது எங்களுக்கு முதல்வராக இருந்தவர் மோடி : உன்னி முகுந்தன் பெருமிதம் | மோகன்லாலுக்கே தெரியாமல் அவர்மீது 12 வருட கோபம் : இயக்குனர் சத்யன் அந்திக்காடு புது தகவல் | நடிகர் சித்திக்கிற்கு அரபு நாடுகளுக்கு செல்ல நிபந்தனையுடன் அனுமதி வழங்கிய நீதிமன்றம் |
சின்னத்திரை நடிகர்கள் சம்யுக்தாவும், விஷ்ணுகாந்தும் திருமணம் செய்து பிரிந்து சென்ற பின் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம் சொல்லி வருகின்றனர். சம்யுக்தா, விஷ்ணுகாந்தை ஒரு காமக்கொடூரன் என்கிற ரேஞ்சில் சித்தரித்து வீடியோ வெளியிட, கடுப்பான விஷ்ணுகாந்த் சம்யுக்தா பேசிய ஆடியோவை வெளியிட்டு அவரது தவறுகளை அம்பலப்படுத்தினார். அதன்மீதான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத சம்யுக்தா தன்னை பாதிக்கப்பட்டவராக காண்பித்துக் கொள்ள ஆண் வர்க்கமே இப்படி தான் என கூறி வருகிறார்.
இந்நிலையில், பிரச்னையிலிருந்து முழுமையாக வெளிவந்துவிட்ட விஷ்ணுகாந்த் தனது இன்ஸ்டாகிராமில், சம்யுக்தாவுடனான திருமண வாழ்க்கை பொய்யான நரக வாழ்க்கை என்றும், அதிலிருந்து தன்னை இயற்கையும் இறைவனும் மீட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்த கடினமான தருணத்தில் தன் மீது நம்பிக்கை வைத்து ஆதரவாக நின்ற அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி கூறி பதிவிட்டுள்ளார். அந்த பதிவிற்கு ஏராளமான பெண் ரசிகைகள் ஆதரவு தெரித்து வருவதுடன் விஷ்ணுகாந்த் பக்கமிருக்கும் நியாயத்தை புரிந்துகொண்டதாக அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.