இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
பிரபல நாட்டுப்புற பாடகி ராஜலட்சுமி 'லைசென்ஸ்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயின் ஆகியிருக்கிறார். 32 வயதில் 2 குழந்தைகளை பெற்றுவிட்டு ஹீரோயின் ஆகியிருக்கிறேன் என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
ஜே.ஆர்.ஜே புரடக்சன்ஸ் சார்பில் என்.ஜீவானந்தம் தயாரித்துள்ள படம் 'லைசென்ஸ்'. கணபதி பாலமுருகன் இயக்கியுள்ள இந்த படத்தில் ராஜலட்சுமி செந்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகிறார். இதற்கு முன்பு சில பாடல் ஆல்பங்களில் ஆடியுள்ளார். மேலும் இந்த படத்தில் ராதாரவி, ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா அனன்யா, வையாபுரி, நமோ நாராயணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். காசி விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய பைஜூ ஜேக்கப் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ராஜலட்சுமி நெகிழ்ச்சியுடன் பேசியதாவது: இதுவரை ஏறிய எந்த மேடையிலும் நான் பதட்டப்பட்டதில்லை. ஆனால் இது சினிமாவில் எனக்கு முதல் மேடை. நான் முதல் குழந்தை பெற்றபோது பிரசவ வலி எப்படி இருந்ததோ அதேபோன்ற ஒரு அனுபவம் இதில் கிடைத்தது. இந்த படத்தின் கதையை இயக்குனர் சொல்லிவிட்டு அதில் கதாநாயகியாக நான் நடிக்கிறேன் என்றபோது என்னால் நம்ப முடியவில்லை. அதிலும் துப்பாக்கி வைத்த ஒரு பெண்ணாக என்னை கற்பனை கூட பண்ணி பார்த்ததில்லை.
இயக்குனர் என்னிடம் கூறும்போது இந்த படத்தில் நடிக்க மற்ற நடிகர்களுக்கு கூட இன்னொரு சாய்ஸ் வைத்துள்ளேன். ஆனால் இந்த கதாநாயகி பாத்திரத்தில் உங்களைத் தவிர வேறு யாரையும் யோசிக்க முடியவில்லை என்று கூறியபோது அவர் என் மீது வைத்த நம்பிக்கையை கண்டு வியந்து போனேன். 32 வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகு கதாநாயகியாக நடிக்கிறேன் என்பதே ஆச்சரியம்தான்.
இவ்வாறு அவர் பேசினார்.