விக்ரம் பிரபுவின் ‛லவ் மேரேஜ்' டிரைலர் வெளியீடு | 50 கோடியில் காசி செட் : ராஜமவுலி படத்துக்காக தயாராகுது | ‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி | 'தி ராஜா சாப் 1000 கோடி வசூலிக்கும்' : இயக்குனர் மாருதி நம்பிக்கை | ஐதராபாத் திரைப்பட நகரம் பற்றி கஜோல் பேச்சு : திரையுலகம் அதிர்ச்சி | தக் லைப் - கர்நாடகா வினியோகஸ்தர் விலகல்? | குத்துச்சண்டை வீரராகிறார் மஹத் | கிஷோர் ஜோடியாக இணைந்த அம்மு அபிராமி | மலேசிய பாடகர் 'டார்க்கி' நாகராஜா வாழ்க்கை சினிமா ஆகிறது |
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தங்கலான். பார்வதி மேனன், மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பா.ரஞ்சித் இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்திலிருந்து வெளிவந்த கிளிம்ஸ் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது இப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ளது. " இந்த படம் 19ம் நூற்றாண்டில் கே.ஜி.எப் பகுதிகளில் வாழ்ந்தவர்களின் கதை. அப்போது அவர்கள் சந்தித்த இன்னல்களை குறித்து இப்படம் பேசும். இந்த படத்திற்காக கடந்த 6, 7 மாதங்களாக விக்ரம் வேறு எந்த படங்களிலும் நடிக்க செல்லவில்லை. 105 நாட்கள் படப்பிடிப்பு நடந்து தற்போது நிறைவு பெற்றுள்ளது. இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு தான் மீதம் உள்ளது. உலகத் தரத்தில் இந்த படம் உருவாகி வருகிறது" என்றார் ரஞ்சித்.