நிவின்பாலியின் 'சர்வம் மாயா' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தவப்புதல்வன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆதிபுருஷ் - ஞாயிறு திரைப்படங்கள் | பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா |
சென்னையில் நடந்த கேப்டன் பிரபாகரன் பட விழாவில் நடிகை ரம்யாகிருஷ்ணன் பேசியது, ''நான் தமிழில் நடிக்க தொடங்கினேன். ஆனால், நிறைய வெற்றி கிடைக்கவில்லை. அடுத்து தெலுங்கு சினிமா போனேன். அந்த நேரத்தில் மீண்டும் தமிழில் இருந்து கேப்டன் பிரபாகரன் பட வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் நீங்க மெயின் ஹீரோயின் இல்லை. 2வது ஹீரோயின் மாதிரிதான் என்றார்கள். பரவாயில்லை என சம்மதித்தேன். ஆனால், அந்த படம் கொடுத்து வெற்றியும், பெயரும், புகழும் அதிகம். இந்த மாதிரி வெற்றி கிடைக்க நான் 10 ஆண்டுகள் காத்திருந்தேன். ஆம், படையப்பாவில் தான் அப்படிப்பட்ட வெற்றி கிடைத்தது. ஆட்டமா தேரோட்டமா ஒலிக்காத இடமே இல்லை. இப்பவும் எந்த விழாவுக்கு சென்றாலும் அந்த பாடலை கேட்கிறேன்.
காலத்தால் அழியாத பாடல் அது. உண்மையை சொன்னால் அந்த பாடல் மூலமாக எனக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தார்கள். இந்த இடத்தில் விஜயகாந்த்தை மிஸ் பண்ணுறேன். இப்போது ரீ ரிலீசில் முன்பை விட 2 மடங்கு வெற்றி பெற விஜயகாந்த் துணையாக இருப்பார். இந்த மேடையில் குட்டி கேப்டன் விஜய பிரபாகரனை பார்க்கிறேன். அவரை சின்ன வயதில் இருந்தே தெரியும். இப்ப, வளர்ந்து அரசியல்வாதி ஆகிவிட்டார். ரொம்ப நாளைக்குபின் மேடையில் இன்றுதான் நிறைய நேரம் பேசியிருக்கிறேன். இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்கு நன்றி' என்றார்.
ஐதராபாத்தில் இருந்த ரம்யா கிருஷ்ணனை இந்த விழாவுக்கு தனது மனைவி ரோஜா மூலமாக பேசி வரவழைத்தாராம் ஆர்.கே.செல்வமணி. ரம்யா கிருஷ்ணனும் மறுக்காமல் விழாவுக்கு வந்து இ ருக்கிறார். ‛ஆட்டமா தேரோட்டமா' பாடலை பிறைசூடன், கங்கை அமரன் எழுத, இளையராஜா இசையமைக்க, ஸ்வர்ணலதா பாடியிருந்தார்.