ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் | ரஜினி, கமல் படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி : மன்னிப்பு கேட்டு அறிக்கை | கொரில்லா பாணியில் நடந்த யெல்லோ படப்பிடிப்பு | தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் |

சில மாதங்களுக்கு முன்பு ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்குமார் கூட்டணியில் வெளியான படம் 'குட் பேட் அக்லலி'. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது என்பதை ஆதிக் சமீபத்தில் உறுதி செய்தார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் என்பவர் தயாரிக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்திற்கு இசையமைக்க அனிரூத் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியானது. இதில் கதாநாயகியாக நடிகை ஸ்ரீ லீலா மற்றும் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சுவாசிகா உடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. தற்போது இந்த படத்தில் ஒரு முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் மிஷ்கின் உடன் பேச்சுவார்த்தை தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.