300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் | பேவரைட் ஆஸ்திரேலிய நடிகையுடன் புத்தாண்டை கொண்டாடிய நதியா | நான் ஹிந்தியில் படம் இயக்கினால் இவர்தான் ஹீரோ : வினோத் | மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதா ? நடிகர் ஜெயசூர்யா மறுப்பு |

விஜய் தற்போது நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. அப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்கு முன்பாகவே விஜய்யின் அடுத்த பட அறிவிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் இசையில் விஜய் நடிக்க உள்ள படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியாகி அந்தப் படத்தைப் பற்றியும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
'லியோ' படம் வெளிவரும் வரை விஜய் 68 படம் பற்றிய அப்டேட்களை கொஞ்சம் அடக்கியே வைத்திருப்பார்கள் எனத் தெரிகிறது. இல்லையென்றால் தேவையற்ற குழப்பங்கள் வர வாய்ப்புள்ளது. இருந்தாலும் விஜய் 68 படத்தின் அடுத்த முழு அப்டேட் ஆக அவரது பிறந்தநாளான ஜுன் 22ம் தேதியன்று வெளியாகும் எனத் தெரிகிறது.
அது படத்தின் தலைப்பு அறிவிப்புடன் முதல் பார்வை வெளியாகுமா அல்லது வெறும் அப்டேட் தானா என்பது விரைவில் தெரியும். 'மங்காத்தா, மாநாடு' படங்களை விடவும் வேறு ஒரு தளத்தில் படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் வெங்கட் பிரபு இருப்பதாகத் தகவல்.