தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி |
சென்னை : ‛‛நான் சிகரெட் பிடித்ததை கண்டித்தவர் சரத்பாபு...'' என அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக தெரிவித்தார்.
200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் நேற்று ஐதராபாத்தில் மறைந்தார். அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஒய்.ஜி. மகேந்திரன், சுஹாசினி, சரத்குமார், ராதிகா, சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். சரத்பாபு உடன் முள்ளும் மலரும் தொடங்கி வேலைக்காரன், அண்ணாமலை, முத்து வரை பல படங்களில் நடித்த நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‛‛என் மேல் அளவு கடந்த அன்பு கொண்டவர். சிகரெட் பிடிப்பதை பார்த்து வருத்தப்படுவார். சிகரெட்டை நிறுத்து, உடம்பை தேத்து நீ ரொம்ப நாள் வாழணும் என்பார். நான் சிகரெட் பிடித்தால் கூட அதை பிடுங்கி அணைத்து தூக்கி போட்டு விடுவார். அவர் முன்னால் நான் சிகரெட் பிடிக்க மாட்டேன். அண்ணாமலை படத்தில் வரும் சவால் டயலாக் சரியாக வரவில்லை. 10-15 டேக் போனது. அப்போது படப்பிடிப்பில் ஒரு சிகரெட் கொண்டு வர சொல்லி எனக்கு கொடுத்தார். அதன்பின் தான் அந்த டேக் ஓகே ஆனது. அவரின் அன்புக்காக இதை இங்கு சொல்கிறேன். என்னை உடம்பு பார்த்துக்கோ என சொல்லியவர் இப்போது அவர் இல்லாமல் போனது வருத்தமாக உள்ளது. ரொம்ப நல்ல மனிதர். அவரின் ஆத்மா சாந்தி அடையணும்'' என்றார்.
முன்னதாக ரஜினி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‛‛இன்று(நேற்று மே 23) என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன். இது ஈடுகட்ட முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்'' என பதிவிட்டார்.