டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' |
லண்டன் நடிகையான எமி ஜாக்சன் தமிழில் ‛மதராசப்பட்டினம்' படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ‛ஐ, 2.0, தெறி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பின்னர் தான் காதலித்து வந்த ஜார்ஜ் பெனாயிட்டோவை திருமணம் செய்வதற்கு முன்பே ஒரு குழந்தைக்கு தாயானார். அதன்பின் அவரையும் பிரிந்தார். தற்போது ஆங்கில நாடக நடிகர் வெஸ்ட்விக்கை காதலித்து வருகிறார். மீண்டும் படங்களில் நடிப்பவர் ஏஎல் விஜய் இயக்கத்தில் 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தில் அருண் விஜய் உடன் நடித்து வருகிறார். விரைவில் இந்தப்படம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா நடந்து வருகிறது. ரெட் கார்ப்பெட் நிகழ்வில் உலகில் உள்ள பல்வேறு நாட்டு திரைக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவில் இருந்து ஐஸ்வர்யா ராய், மிருணாள் தாக்கூர், சாரா அலிகான், ஊர்வசி உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். நடிகை எமி ஜாக்சனும் ரெட் கார்ப்பெட் நிகழ்வில் பங்கேற்றார். கருப்பு நிற உடையில் மிகவும் செக்ஸியான உடை அணிந்து அவர் பங்கேற்றார். குறிப்பாக அவரின் பின்னழகு தெரியும் அளவுக்கு அவரின் ஆடை செக்ஸியாக இருந்தது. இதை ஒரு சிலர் ரசித்தாலும் பொது விழாவில் இப்படியா பங்கேற்பது என அவரை விமர்சித்தும் வருகின்றனர்.