குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களையும், பாடல்களையும் கொடுத்தவர் யுவன்ஷங்கர் ராஜா. ஆனால், டாப் நடிகர்களில் அஜித் உடன் மட்டுமே அதிகம் இணைந்திருக்கிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் யுவனின் அப்பா இளையராஜாவின் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அவர்கள் யுவனுக்கு தங்கள் படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை இதுவரை கொடுக்கவில்லை. பின்னணி இசையிலும் தனி முத்திரை பதிப்பவர் யுவன்.
விஜய்யுடன் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஜெகன் இயக்கத்தில் வெளிவந்த 'புதிய கீதை' படத்திற்கு மட்டுமே இசையமைத்திருக்கிறார். அதற்குப் பிறகு விஜய், யுவன் கூட்டணி எந்த ஒரு படத்திலும் இணையவில்லை. இந்நிலையில் விஜய்யின் அடுத்த படமான 68வது படத்தை வெங்கட்பிரபு இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வெங்கட்பிரபு இயக்கும் படங்களுக்கு யுவன்தான் எப்போதுமே இசையமைப்பாளர். 'மன்மத லீலை' படத்திற்கு மட்டும் தன் தம்பி பிரேம்ஜியை இசையமைக்க வைத்தார் வெங்கட்பிரபு.
விஜய் 68 படத்தை எஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்நிறுவனம் தயாரித்து கடைசியாக வெளிவந்த 'லவ் டுடே' படத்தின் வெற்றிக்கு யுவனின் இசையும் ஒரு காரணம். யுவன் இசையமைக்க விஜய்யும் சம்மதம் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 டிசம்பர் மாதக் கடைசியில் விஜய்யை சந்தித்த பின் அவருடன் இருந்த புகைப்படத்தைப் பதிவிட்டு, 'பயர்' எமோஜியைப் பதிவு செய்திருந்தார் யுவன். அப்போதிருந்தே இக்கூட்டணி எப்போது இணையப் போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். விஜய் 68ல் அது நடக்குமா ?.