மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அவரது 68வது படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பதாகவும், தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மாலிலேனி இயக்குகிறார் என்று சமீபகாலமாக தொடர்ந்து தகவல் பரவி வந்தது.
இந்த நிலையில் நேற்று திடீர் திருப்பமாக மற்றொரு தகவல் பரவியது. அந்த தகவலின் படி, விஜய்-ன் 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார் இப்படத்தை பிகில் படத்தை தயாரித்த ஏ. ஜி. எஸ் நிறுவனம் தயாரிக்கின்றனராம். விஜய்யின் பிறந்தநாளில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும், ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
ஆனால் இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் வெங்கட்பிரபு ஒரு பேட்டியின் போது விஜய்யின் படத்தை பற்றி பேசினார். அந்த வீடியோ டிரெண்ட் ஆனது.