நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் பின்னணி பாடகியாகவும், நடிகையாகவும் தாக்குப்பிடித்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. தொடர்ந்து சீரான இடைவெளியில் படங்களில் நடித்துவரும் ஆண்ட்ரியாவின் கைவசம் தற்போது மட்டும் அரை டஜன் படங்கள் உள்ளன. இந்த நிலையில் தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்கும் அவரது 75வது படமான சைந்தவ் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார் ஆண்ட்ரியா.
சமீபத்தில் இந்த படத்திற்கான இவரது கேரக்டர் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது, இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். இதற்கு முன்னதாக கடந்த 2013ல் தமிழில் வெளியான வேட்டை திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான தடாகா படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா, அதன்பிறகு பத்து வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் தெலுங்கு திரையுலகில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.