ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் | தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் |

நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படம் 'மார்க் ஆண்டனி'. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீஸர் இன்று (ஏப்.,27) மாலை 6:30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதற்கு முன்னதாக முன்னணி நடிகரான விஜய்யிடம் டீஸரை காண்பிக்க படக்குழுவினர் திட்டமிட்டு, அவரிடம் அனுமதி கேட்டு தொடர்பு கொண்டனர்.
உடனடியாக மார்க் ஆண்டனி படக்குழுவிற்கு நடிகர் விஜய் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து விஜய்யை சந்தித்த படக்குழுவினர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றனர். பிறகு விஜயிடம் மார்க் ஆண்டனி படத்தின் டீஸரை காண்பித்தனர். இதனை பார்த்த விஜய் படக்குழுவினரை பாராட்டினார்.

இச்சந்திப்பின்போது, விஜய்யிடம் விஷால் கூறுகையில், ‛எனது நீண்ட நாள் விருப்பமான திரைப்படம் இயக்கும் ஆசை 'துப்பறிவாளன் 2' மூலம் தொடங்கியுள்ளது. தொடர்ந்து திரைப்படங்களை இயக்க உள்ளேன். உங்களுக்கும் இரண்டு கதை தயார் செய்துள்ளேன்' என்றார். இதனை கேட்ட விஜய், ‛நீ வா நண்பா.. நான் இருக்கிறேன்.. சேர்த்து பயணிப்போம்' எனக் கூறினார்.
இச்சந்திப்பின்போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. படத்தின் டீஸர் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாக உள்ளது. நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படம் 'மார்க் ஆண்டனி'. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீஸர் இன்று (ஏப்.,27) மாலை 6:30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதற்கு முன்னதாக முன்னணி நடிகரான விஜய்யிடம் டீஸரை காண்பிக்க படக்குழுவினர் திட்டமிட்டு, அவரிடம் அனுமதி கேட்டு தொடர்பு கொண்டனர்.
உடனடியாக மார்க் ஆண்டனி படக்குழுவிற்கு நடிகர் விஜய் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து விஜய்யை சந்தித்த படக்குழுவினர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றனர். பிறகு விஜயிடம் மார்க் ஆண்டனி படத்தின் டீஸரை காண்பித்தனர். இதனை பார்த்த விஜய் படக்குழுவினரை பாராட்டினார்.

இச்சந்திப்பின்போது, விஜய்யிடம் விஷால் கூறுகையில், ‛எனது நீண்ட நாள் விருப்பமான திரைப்படம் இயக்கும் ஆசை 'துப்பறிவாளன் 2' மூலம் தொடங்கியுள்ளது. தொடர்ந்து திரைப்படங்களை இயக்க உள்ளேன். உங்களுக்கும் இரண்டு கதை தயார் செய்துள்ளேன்' என்றார். இதனை கேட்ட விஜய், ‛நீ வா நண்பா.. நான் இருக்கிறேன்.. சேர்த்து பயணிப்போம்' எனக் கூறினார்.
இச்சந்திப்பின்போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. படத்தின் டீஸர் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாக உள்ளது.