மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ,ஜஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். கடந்த ஆண்டே இப்படத்தின் முதல் பாகம் வெளியானது. தற்போது வரும் ஏப்ரல் 28 அன்று இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகிறது.
அதற்காக இப்படக்குழுவினர் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மும்பை,பெங்களூர் போன்ற இடங்களில் புரோமஷனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர். பெங்களூரில் நடைபெற்ற இப்படத்தின் நிகழ்ச்சியில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் ஜெயம் ரவி கூறியது; நான் படங்களில் நல்லவனாக நடிக்க விருப்பமில்லை. ஏனெனில் ஒரே மாதிரியான நடிப்பை மட்டும் வெளிபடுத்த முடியும். ஆனால் கெட்டவனாக நடித்தால் தனது நடிப்பு திறனை நன்றாக வெளிப்படுத்தலாம். குறிப்பாக இந்த ராஜ ராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடிக்க மணி சார் நிறைய திறன்களை சொல்லி தந்தார். இந்த கதாபாத்திரத்திற்காக யாரையும் பார்த்து நான் காப்பி அடிக்க விருப்பமில்லை.
பல வருடங்களுக்கு முன்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்த ராஜ ராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் நான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் முன்பு அந்த படத்தை நான் பார்க்கவில்லை. ஒருவேளை அந்த படத்தை நான் பார்த்திருந்தால் அவரின் நடிப்பின் தாக்கம் என்னுள் வந்திருக்கும், என் நடிப்பு அவர் நடிப்பிற்கு 10 சதவீதம் கூட ஈடாகாது. என்னால் எப்படி நடிக்க முடியுமோ அப்படி நடித்தேன். மணி சாரை நம்புனேன், கல்கியை நம்பினேன், கடவுளை நம்பினேன். என்னுடைய வழியில் நான் சிறப்பாக நடித்து முடித்துள்ளேன் என பெருமிதமாக கூறியுள்ளார் ஜெயம் ரவி.