ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
புதுடில்லி : பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மகள் ஆராத்யா பச்சன் உடல்நிலை குறித்து, 'யு டியூப்' சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட 'வீடியோ'க்களை நீக்கும்படி, 'கூகுள்' நிறுவனத்திற்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதிக்கு, 11 வயதில் ஆராத்யா பச்சன் என்ற மகள் இருக்கிறார். இவரது உடல்நிலை குறித்து, யு டியூப் சமூக வலைதளத்தில் சிலர் வீடியோக்களை பதிவேற்றம் செய்தனர். அதில், ஆராத்யா அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி வருவதாக தெரிவித்து இருந்தனர்.
இதை எதிர்த்து, ஆராத்யா, அவரது தந்தை அபிஷேக் சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நேற்று உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஹரி சங்கர் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி உத்தரவிட்டதாவது: ஒவ்வொரு குழந்தையும் மாண்புடனும், மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும். ஒரு குழந்தையின் உடல் நலம், மன நலம் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவது, சட்டப்படி ஏற்க முடியாதது. ஆராத்யா உடல்நிலை குறித்து சர்ச்சைக்குரிய வீடியோக்களை பதிவேற்றம் செய்த யு டியூபர்கள் குறித்து, கூகுள் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட வீடியோக்களை யு டியூப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். இந்த சமூக வலைதளத்தில் ஆட்சேபனைக்குரிய விவகாரத்தை கையாள்வதில் உள்ள கொள்கை குறித்து, கூகுள் விரிவான பதிலை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.