Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பிரபல தயாரிப்பாளரின் மனைவி மரணம்: சல்மான் பட காட்சி ரத்து

21 ஏப், 2023 - 04:39 IST
எழுத்தின் அளவு:
Famous-producer-wife-pamela-chopra-passes-away-:-Salman-khan-movie-show-cancelled

பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் யஷ் சோப்ரா. இவரது மனைவி பமீலா சோப்ரா. 74 வயதான பமீலா சோப்ரா பாடகி, எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர் மற்றும் பல யஷ் ராஜ் திரைப்படங்களின் இணை தயாரிப்பாளராகவும் இருந்தார். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பமீலா சோப்ரா கடந்த சில நாட்களாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கும் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

பமீலா சோப்ராவின் மரணத்தையொட்டி சல்மான்கான் நேற்று தான் ஏற்பாடு செய்திருந்த 'கிசி கா பாய் கிசி கி ஜான்' படத்தின் சிறப்பு காட்சியை ரத்து செய்தார். இந்த படம் இன்று வெளியாகி உள்ளது. இது தமிழில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த 'வீரம்' படத்தின் ரீமேக் ஆகும். யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் சல்மான்கான் நடித்த பல படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஐஸ்வர்யா ராய் மகள் தொடர்ந்த வழக்கு :  'கூகுள்' நிறுவனத்திற்கு டில்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவுஐஸ்வர்யா ராய் மகள் தொடர்ந்த வழக்கு : ... சினிமா விமர்சகர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த ஊர்வசி ரவுட்டேலா சினிமா விமர்சகர் மீது அவதூறு வழக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in