சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் பூஜா ஹெக்டே தற்போது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். சல்மான்கானுக்கு ஜோடியாக கிஸி கா பாய் கிஸி கி ஜான் என்கிற படத்தில் நடித்துள்ளார். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்காக இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படம் இன்று ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகி உள்ளது. இதையடுத்து கடந்த சில வாரங்களாகவே இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார் பூஜா ஹெக்டே.
அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியில் இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்ட பூஜா ஹெக்டே, “படப்பிடிப்பு தளத்தில் எல்லோரும் சல்மான்கானை 'பாய்' என்று மரியாதையாக அழைத்ததால் நானும் பாய் என்றே அவரை அழைத்தேன். ஆனால் சல்மான்கான் அப்படி அழைக்க வேண்டாம் என என்னிடம் கூறியதுடன் சல்மான் என்று தன் பெயரை சொல்லியே அழைக்கும்படி கூறினார். ஆனாலும் அது மரியாதையாக இருக்காது என்பதுடன் என்னால் அப்படி கூப்பிடவும் முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன். அதனால் எனக்கும் அவருக்கும் சங்கடம் வராத வகையில் அவரது பெயரை சுருக்கி எஸ்.கே என அவரை அழைக்க ஆரம்பித்தேன்” என்று கூறியுள்ளார் பூஜா ஹெக்டே.