லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ராம்கோபால் வர்மா தயாரித்துள்ள படம் 'சாரி'. தெலுங்கில் தயாராகி உள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வருகிற டிசம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை கிரி கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
இதில் ஆராத்யா சோலோ நாயகியாக நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் பேட் பாய்ஸ், ராஸ்தா, காக்கிபடா, தால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் பான் இந்தியா நாயகி ஆகிறார். சத்யா யாது அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் கிரி கிருஷ்ணா கூறும்போது “இன்ஸ்டாகிராமில் உள்ள பிரபலமான பெண்களின் சூழ்நிலை மற்றும் அவர்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளையும் பேசும் படமாக பல திரில்லர் தருணங்களுடன் 'சாரி' இருக்கும். படத்தின் அடிப்படை கரு அதிகப்படியான காதல் பயமுறுத்தும் என்பதுதான். சமூக ஊடகங்களில் ஏற்படும் சில எதிர்பாராத விஷயங்கள் சமூகத்திலும் தனிப்பட்ட ஒருவர் வாழ்விலும் ஏற்படுத்தும் மாற்றங்களை இந்தப் படம் பேசுகிறது. இதில் ஆராத்யா கதாநாயகியாகவும், சத்யா யாது பயமுறுத்தும் பயங்கரமான காதலனாகவும் நடித்துள்ளார்” என்றார்.