ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் |
ஹாலிவுட்டின் நட்சத்திரங்களான ராபர்ட் டி நீரோ, ஜேன் ரோசென்டல் மற்றும் கிரேக் ஹாட்காப் ஆகியோரால் தொடங்கப்பட்டது டிரிபெகா சர்வதேச திரைப்பட விழா. சர்வதேச அளவில் முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. தற்போது இதன் 22வது விழா வருகிற ஜூன் 7ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை நியூயார்க்கில் நடக்கிறது. இந்த விழாவில் ஜூன் 13ம் தேதி இந்தியாவில் தயாராகி வரும் பிரமாண்ட பான் இந்தியா படமான 'ஆதிபுருஷ்' திரையிட தேர்வாகி உள்ளது. இதன் மூலம் இந்த படம் சர்வதேச தளதத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஓம் ராவத் கூறியதாவது: ஆதி புருஷ் ஒரு படம் அல்ல. இது ஒரு உணர்ச்சி. ஒரு உணர்வு. இந்தியாவின் உணர்வை எதிரொலிக்கும் கதையைப் பற்றிய எங்களது பார்வை. உலகின் மதிப்பு மிக்க சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒன்றான டிரிபெகா நடுவர் குழுவால் 'ஆதி புருஷ்' தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்தபோது ஒரு மாணவனாகவே எப்போதும் இருக்க விரும்புகிறேன்.
டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் 'ஆதி புருஷ்' படத்தின் பிரத்யேக திரையிடல், எனக்கும் என்னுடைய ஒட்டுமொத்த குழுவிற்கும் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில் நமது கலாச்சாரத்தின் மிகவும் வேரூன்றிய ஒரு கதையை உலக அரங்கில் காட்சிப்படுத்துகிறோம். இந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு ஆதி புருஷை கண்டு ரசிக்கும் பார்வையாளர்களின் எதிர்வினையைக் காண்பதற்கு உற்சாகமாக காத்திருக்கிறோம். என்றார்.
ஆதிபுருஷ் ராமாயணத்தின் நவீன வடிவமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ராமனாக பிரபாசும், சீதையாக கிருத்தி சனோனும், ராவணனாக சயீப் அலிகானும் நடிக்கிறார்கள். ஓம் ராவத் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை டி சிரீஸ் பூசன் குமார் மற்றும் கிரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார் மற்றும் ரெட்ரோஃபைல்ஸின் ராஜேஷ் நாயர் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் ஜூன் மாதம் 16ஆம் தேதியன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.