ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
நடிகை ஷாலினி அஜித்தின் தங்கை ஷாமிலி. மணிரத்னம் இயக்கிய 'அஞ்சலி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருது பெற்றவர். அதன்பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். நாயகியாக சில படங்களில் நடித்தார். கடைசியாக விக்ரம் பிரபு ஜோடியாக 'வீர சிவாஜி' படத்தில் நடித்தார். கடந்த சில வருடங்காக சினிமா வாய்ப்பு எதுவும் இன்றி இருக்கும் ஷாமிலி தற்போது ஓவியராக மாறி இருக்கிறார்.
பிரபல ஓவியர் ஏ.வி.இளங்கோவனிடம் முறைப்படி ஓவியம் கற்ற ஷாமிலி தற்போது ஏராளமான ஓவியங்களை வரைந்துள்ளார். ஏற்கெனவே பல இடங்களில் தனது ஓவியங்களை காட்சிப்படுத்தியுள்ள ஷாமிலி, சமீபத்தில் துபாயில் உள்ள 'வேர்ல்ட் ஆர்ட் துபாய்' எனும் சர்வதேச ஓவிய கலைக் கூடத்தில் கண்காட்சியாக பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தி இருக்கிறார். இந்த கலைக்கூடத்தில் உலகம் முழுவதும் 60 நாடுகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்களுடைய படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர். சர்வதேச அளவில் ஓவியராக வலம் வர வேண்டும் என்பதே ஷாமிலியின் லட்சியம்.