ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
விமல் தயாரித்து நடித்த 'மன்னர் வகையறா' படம் 5 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. இந்த படத்தை தயாரிக்க விமல் கோபி என்பவரிடம் 4.5 கோடி கடனாக பெற்றுள்ளார். இந்த கடனை திருப்பிச் செலுத்தும் வகையில் காசோலை வழங்கி உள்ளார். அந்த காசோலை வங்கயில் பணம் இன்றி திரும்பி வந்தது. அதன் பின்னரும் விமல் கடனை திருப்பிச் செலுத்தவில்லை.
இதனால் கோபி செக்மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக நடிகர் விமல் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கின் சாட்சிகளை விசாரிக்க விமல் தரப்பில் முன் வரவில்லை. வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட நடிகர் விமலுக்கு ரூபாய் 300 அபராதம் விதித்த நீதிமன்றம் விசாரணையை வரும் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தது.