ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
கார், பைக் ஆகியவற்றை வாங்கும் போது சிலர் அதற்கான நம்பர்களை பேன்சி நம்பர்களாக வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதற்காக அரசு தரப்பில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. நம்பருக்கேற்றபடி கட்டணங்கள் அமையும்.
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி சமீபத்தில் எம்யுவி ரக கார் ஒன்றை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். அந்த வண்டிக்காக '1111' என்ற எண்கள் கேட்டு, அதற்காக சுமார் 5 லட்சம் வரை கட்டணம் செலுத்தி வாங்கியுள்ளார். அவர் வைத்திருக்கும் கார்கள் அனைத்திற்குமே '1111' என்ற எண்கள்தான் இருக்கிறதாம்.
முன்னணி சினிமா நடிகர்கள், நடிகைகள் பலரும் அவர்களது சொந்த உபயோகங்களுக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட விலை உயர்ந்த கார்களை வைத்துள்ளார்கள். சிலர் அதிகபட்சடமாக 20 கோடி வரை மதிப்புள்ள கார்களை வைத்துள்ளார்கள். புதுப்புது மாடல்கள் வரும் போது பழைய கார்களை விற்றுவிட்டு புதிய கார்களுக்கு மாறுவதையும் சிலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.