புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பிதாமகன், கஜேந்திரா, போன்ற படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை. கடந்த சில ஆண்டுகளாகவே இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார். நண்பர்கள் உதவியால் சிகிச்சை பெற்று வந்த இவருக்கு சிகிச்சைக்கு கூட பணமின்றி தவித்து வருவதாக சமீபத்தில் வீடியோ வெளியானது. மேலும் அவரது உடலும் மெலிந்து கால்களில் புண்கள் வந்து மிகவும் அவதிப்பட்டு வந்தார். அந்தசமயம் நடிகர்கள் சூர்யா, கருணாஸ் உள்ளிட்ட சில திரைப்பிரபலங்கள் உதவினர்.
தற்போது வி.ஏ துரை அண்ணா நகரில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு மருத்துவ செலவிற்கான ரூ 3 லட்சத்தை நடிகர் ராகவா லாரான்ஸ் மருத்துவமனையில் செலுத்தி உதவியிருக்கிறார்.