புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கதிரேசன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ள 'ருத்ரன்' படம் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் ஹிந்தி மற்றும் வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை வாங்கியிருந்த ரெவன்சா குளோபல் வென்சர்ஸ் என்ற நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து படத்திற்கு இடைக்காலத் தடை உத்தரவை வாங்கியுள்ளது.
12 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு தயாரிப்பாளருக்கும், ரெவன்சா நிறுவனத்திற்கும் இடையே ஏற்கெனவே ஒப்பந்தம் போடப்பட்டிருந்ததாம். ரெவன்சா நிறுவனம் 10 கோடி முன்பணத்தையும் கொடுத்துவிட்டார்களாம். ஆனால், தயாரிப்பு தரப்பு மேற்கொண்டு 4 கோடியே 50 லட்சம் கேட்டு, அதை ரெவன்சா நிறுவனம் தர மறுத்ததால் ஒப்பந்தத்தை 'ருத்ரன்' தயாரிப்பாளர் ரத்து செய்துவிட்டாராம். எனவே தான் வழக்கு தொடர்ந்துள்ளார்கள். அதை விசாரித்த நீதிமன்றம் ஏப்ரல் 24 வரை படத்தை வெளியிட தடை விதித்துள்ளது.
'ருத்ரன்' படத்திற்காக தமிழகத்தில் தியேட்டர்கள் பலவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில் தற்போது இடைக்காலத் தடை காரணமாக திட்டமிட்டபடி ஏப்ரல் 14ம் தேதி வெளியாகாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தயாரிப்பாளருக்கும், ரெவன்சா நிறுவனத்திற்கும் பேச்சு வார்த்தை நடந்து, சுமூகத் தீர்வு ஏற்பட்டால் மட்டுமே படம் வெளியாகும். இரண்டு நாளில் அது நடக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.