லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
மாஸ்டர் மகேந்திரன் கதை நாயகனாக நடிக்கும் படம் 'ரிப்பப்பரி'. நா.அருண் கார்த்திக் தயாரித்து, இயக்கும் இந்த படம் வருகிற 14ம் தேதி வெளிவருகிறது. இப்படத்தில் ஆரத்தி, காவ்யா அறிவுமணி, ஶ்ரீனி, நோபிள் ஜேம்ஸ், மாரி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். திவாரகா தியாகராஜன் இசையமைக்க, தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் அறிமுக நிகழ்ச்சில் இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகும் காவ்யா அறிவுமணி மற்றும் ஆரத்தி இருவரும் ரசிகர்களின் ஆதரவை கேட்டுள்ளனர். சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்துள்ள காவ்யா அறிவுமணி கூறும்போது “இது தான் என் முதல் படம். இந்தப்படத்தில் பாரதி எனும் கேரக்டர் பண்ணியிருக்கிறேன். மாஸ்டர் மகேந்திரன் என் நண்பர், ஆனால் இப்படத்தில் ஶ்ரீனி உடன் தான் எனக்கு அதிக போர்ஷன் இருந்தது. எனக்கு எல்லோரும் ஆதரவாக இருந்தார்கள். இங்கு இருக்கும் அனைவருமே சூப்பராக வேலை பார்த்திருக்கிறார்கள். படம் நன்றாக வந்துள்ளது. சின்னத்திரையில் எனக்குக் கிடைத்த வரவேற்பு போலவே, பெரிய திரையிலும் நீங்கள் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன்” என்றார்.
அறிமுக நடிகை ஆரத்தி கூறும்போது “இது என் முதல் தமிழ்ப்படம், இது ரொம்ப இன்ரஸ்டிங்கான மூவி. கதை கேட்ட போதே எனக்குப் புரிந்தது. உங்களுக்கும் படம் பார்க்கும் போது நிறைய ஆச்சரியம் தரும். இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி. உங்கள் ஆதரவைத் தந்து, படத்தை வெற்றி பெறச் செய்யக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.