புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பாட்ஷா படத்திற்கு பின் ரஜினிகாந்தின் நட்சத்திர அந்தஸ்த்தை இன்னும் பல மடங்கு உயர்த்திய படம் படையப்பா. 1999 ஏப்ரல்-10ஆம் தேதி வெளியான, படையப்பா படம் வெளியாகி இன்று 24ஆம் வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தப்படத்தின் வெற்றிக்கு வழக்கம்போல ரஜினிகாந்த்தின் நடிப்பு, ஸ்டைல், பஞ்ச் வசனங்கள் ஆகியவை காரணம் என்றாலும் அவருக்கு பக்கபலமாக கே.எஸ்.ரவிக்குமாரின் நேர்த்தியான டைரக்சன், நீலாம்பரியாக மிரட்டிய ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு, ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருவான பாடல்கள் ஆகியவையும் வெற்றிக்கு தோள் கொடுத்து நின்றன.
குறிப்பாக, ரஜினிக்கும் ரம்யாகிருஷ்ணனுக்குமான மோதல்கள் என படம் முழுவதும் பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் இருந்தது. இந்தப்படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் ஜெயலலிதாவை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டு இருந்ததாக கூட அப்போது சொல்லப்பட்டது. ஆனால் இந்த கதாபாத்திரத்தை பொன்னியின் செல்வன் நாவலில் உள்ள நந்தினியின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து இயக்குனர் கேஎஸ் ரவிக்குமாரிடம் உருவாக்க சொன்னதாக ரஜினியே கூறியுள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ரஜினியுடன் இணைந்து நடித்த கடைசி படமாக இது அமைந்தது. பல வருடங்களுக்கு பிறகு மூன்று மணி நேரம் ஓடும் ஒரு படமாக படையப்பா வெளியானது. ஆனால் எந்த ஒரு நிமிடத்திலும் படம் போரடிக்காமல் சென்றதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த படத்தை தியேட்டருக்கு வந்து பார்த்தனர்.
இந்த படத்தில் ரஜினிகாந்த் பேசிய, “என் வழி தனி வழி”, “கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது.. கஷ்டப்படாம கிடைக்கிற எதுவும் நிலைக்காது”, “அதிகமாக ஆசைப்படுற ஆம்பளையும் அதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது”, “போடா அந்த ஆண்டவனே நம்ம பக்கம்” உள்ளிட்ட பஞ்ச் வசனங்களும், ரம்யா கிருஷ்ணன் பேசிய, “வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்னை விட்டு போகல” உள்ளிட்ட வசனங்களும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றன.
அந்தவகையில் படையப்பா திரைப்படம் ரஜினியின் மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட ஒரு மாணிக்க கல் என்றே சொல்லலாம்.