நீதிமன்றம் செல்வதை புறக்கணித்து விட்டு சினிமா பிரிவியூ பார்க்க சென்ற நடிகர் தர்ஷன் | அஜித் மகனாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணினேன் ; பிரேமலு ஹீரோ வருத்தம் | அஜித்தின் 'குட் பேட் அக்லி'யால் காத்து வாங்கும் வீர தீர சூரன்! | சூர்யாவின் ரெட்ரோ சிங்கிள் பாடல் வெளியானது! | நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு! | கமலின் 237வது படம்! புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்!! | அஜித்துக்காக ஐ அம் வெயிட்டிங்! - வெங்கட் பிரபு சொன்ன தகவல் | அடுத்த நட்சத்திர காதல் கிசுகிசு - துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் | குடும்பத்தாருடன் ஹைதராபாத் திரும்பிய பவன் கல்யாண் | விஷ்வம்பரா - 70 வயதிலும் நடனத்தில் அசத்தும் சிரஞ்சீவி |
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அதில் கதாநாயகியாக நடித்த அனுஷ்கா, இன்னும் உயரத்திற்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து அவரது நடிப்பில் வெளியான படங்கள் அந்த வெற்றியை தக்க வைக்க தவறின. இடையில் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்த அவரால் நினைத்தபடி தனது பழைய உருவத்திற்கு கொண்டு வருவதற்கு ரொம்பவே சிரமப்பட்டார். இதனால் பட வாய்ப்புகளும் குறைந்து தற்போது ‛மிஸ் பாலிஷெட்டி மிசஸ் பாலிஷெட்டி' என்கிற கைவசம் உள்ள ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துள்ளார் அனுஷ்கா.
இந்த நிலையில் மலையாளத்தில் ஒன்பதாம் நூற்றாண்டு பின்னணியில் தயாராக உள்ள கத்தனார் என்கிற கதாநாயகியாக நடிக்க அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக ஜெயசூர்யா நடிக்கிறார். ஏற்கனவே ஜெயசூர்யா நடித்த மங்கி பென் மற்றும் கடந்த வருடம் மலையாளத்தில் குடும்பப்பாங்கான படமாக வெளியாகி வெற்றி பெற்ற ஹோம் ஆகிய படங்களை இயக்கிய ரோஜின் தாமஸ் தான் இந்த படத்தை இயக்குகிறார். மலையாள திரையுலகில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான கோகுலம் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது.
அனுஷ்காவை இந்த படத்தின் மூலமாக மலையாள திரையுலகிற்கு அழைத்து வருவதன் பின்னணியில் ஆச்சரியமான காரணம் ஒன்றும் உள்ளது. இந்த படம் கிட்டத்தட்ட 90 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் கிட்டத்தட்ட ஏழு மொழிகளில் இந்த படம் வெளியிடப்படும் என்றும் அதற்காகவே நடிகை அனுஷ்காவை இந்த படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் ஏப்.,10ம் தேதி துவங்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 200 நாட்கள் நடைபெற இருக்கிறதாம்.