ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

வழுத்தூர் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில்..நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் குலதெய்வ வழிபாடு செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மேலவழுத்தூரில் அமைந்துள்ள காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களின் குலதெய்வ கோயிலில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.
இயக்குனர் விக்னேஷ்சிவனை காதலித்த நடிகை நயன்தாரா வாடகை தாயின் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்த இரண்டு ஆண் குழந்தைகளுக்கு ஒரு குழந்தைக்கு உயிர்ருத்ரோநீல் என்.சிவன் என்றும், மற்றொரு குழந்தைக்கு உலக தெய்விக் என்.சிவன் என்றும் பெயர் சூட்டியுள்ளனர். இந்த நிலையில் தனது குலதெய்வ கோயிலான வழுத்தூர் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இருவரும் பொங்கல் வைத்து, சாமிக்கு சிறப்பு ஆராதனை செய்து வழிபட்டனர்.
நயன்தாரா கோவிலுக்கு வந்த உடனே இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும், ரசிகர்களும் குவிந்து விட்டனர். அய்யம்பேட்டை போலீஸ் ஆய்வாளர் (பொறுப்பு) கலைவாணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.




