ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நெல்சன் இயக்கத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், தமன்னா, யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ரப் அண்ட் டப்பான ஜெயிலர் வேடத்தில் நடித்து வரும் ரஜினி, சண்டை காட்சிகளில் பெரிய அளவில் அதிரடி காட்டி இருப்பதாக அப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார்.
அவர் கூறுகையில், ஜெயிலர் படத்தின் அனைத்து சண்டைக் காட்சிகளுமே சிறப்பாக வந்துள்ளது. அதிலும் இந்த படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி மிகப் பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரஜினிகாந்த் இந்த ஜெயிலர் கதாபாத்திரத்திற்கு ஏற்ப மிகவும் ஆக்டிவாக நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஒவ்வொரு சண்டை காட்சிகளிலும் அவர் காட்டிய ஈடுபாடு வியப்பாக இருந்தது. அதனால் ஜெயிலர் படத்தின் சண்டை காட்சிகள் ரஜினி ரசிகர்களை பெரிய அளவில் கவரக்கூடியதாக இருக்கும் என்று ஸ்டண்ட் சில்வா தெரிவித்திருக்கிறார்.