டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு இப்போது குணமாகி வருகிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் சமந்தா.
அவர் கூறியது, எனக்கு ஏற்பட்டுள்ள உடல் நிலை பாதிப்பில் இருந்து மீள்வது கடினமாக உள்ளது. 3 மாதங்களாக சொல்ல முடியாத வேதனையை அனுபவித்தேன். மீண்டும் என்னை பழைய நிலைக்கு கொண்டு வர போராடுகிறேன். இப்போது "நான் 'குஷி', 'சிட்டாடல்' படங்களில் நடித்த பிறகு எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு நடிப்பில் இருந்து சில காலம் ஓய்வு எடுக்க போகிறேன். நல்லபடியாக மீண்டும் நடிக்க விரும்புகிறேன். அதற்காகவே இந்த ஓய்வு. நிச்சயம் மீண்டும் நடிக்க வருவேன்" என கூறியுள்ளார்.




