மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இயக்குநர் சுந்தர்.சி யின் உதவியாளர் வி.எம். ரத்தினவேல் எழுதி இயக்கும் படம் 'தலைக்கவசமும் 4 நண்பர்களும்'. இந்தப் படத்தை டீம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. கதாநாயகனாக ஆனந்த்நாக் அவருடைய நண்பர்களாகப் புதுமுகம் ராஜேஷ், ஶ்ரீஜித், விக்கி பீமா ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ஸ்வேதா டோரத்தி, ரேணுகா பதுளா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஓஏகே சுந்தர், தளபதி தினேஷ், கே.எஸ்.ஜி. வெங்கடேஷ், மீசை ராஜேந்திரன், மணிமாறன், செந்தி குமாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவு சீனு ஆதித்யா, இசை ராஜ்பிரதாப்.
படம் பற்றி இயக்குநர் வி.எம்.ரத்னவேல் கூறியதாவது: சுந்தர் சி 10 ஆண்டுகள் அவரிடம் உதவியாளராகப் பணியாற்றி இருக்கிறேன். இந்தப் படம் கிரவுட் பண்டிங் மூலம் கொரோனாவுக்கு முன்பு தொடங்கப்பட்டு 25 பேர் நண்பர்கள் இணைந்தார்கள். இடையில் கொரோனா வந்ததும் அவர்கள் மெல்ல மெல்ல விலகினார்கள். எனவே அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. கடைசியில் அதிலிருந்து எனது உறவினர் சிலரை மட்டும் சேர்த்துக் கொண்டு 6 பேருடன் இணைந்து நானும் சேர்ந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளேன்.
சென்னையிலுள்ள ஒரு குப்பத்திற்கு அனாதைச் சிறுவர்கள் நான்கு பேர் வந்து இணைகிறார்கள். அவர்கள் அந்த மக்களோடு ஒன்றாக கலக்கிறார்கள். நாலு பேரும் நாலு இடத்தில் வேலை பார்க்கிறார்கள். கிடைக்கும் வருமானத்தில் தங்கள் தேவைக்குப போக மீதியை அந்தக் குப்பத்தில் உள்ள முதியவர்களுக்கு மருத்துவச் செலவிற்கும் மாணவர்களுக்குப் படிப்பு செலவுக்கும் என உதவுகின்றனர் அப்படிப்பட்ட அவர்கள் கையில் தலைக்கவசம் மூலம் ஒரு நல்ல வாய்ப்பு வருகிறது. அதை அவர்கள் எப்படிச் சரியாகப் பயன்படுத்தி அந்தப் பகுதி மக்களுக்கு நன்மை செய்கிறார்கள் என்பதுதான் இந்தக் கதை.
குப்பத்து இளைஞர்கள் என்றால் பொறுப்பில்லாதவர்களா? நான் இதில் அவர்களைப் பொறுப்புள்ள இளைஞர்களாகக் காட்டியுள்ளேன். அது மட்டுமல்ல படத்தில் ஒரு பிரேமில் கூட குடித்தல் புகைத்தல் காட்சி இருக்காது. அந்த அளவிற்கு நாங்கள் நாகரிகமாக இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம்.
இந்தக் கதை முழுக்க முழுக்க சென்னையில் நடப்பதால் சென்னை உதயம் திரையரங்கின் எதிரே உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் தான் பெரும் பகுதி படப்பிடிப்பு நடந்தது. கோயம்பேடு பேருந்து நிலையம், கே.கே. நகர் என்று சென்னைப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தினோம்.
படம் சொல்லும் கருத்து என்ன என்றால், நமக்கு கிடைக்கும் வாய்ப்பை எந்தச் சூழ்நிலையிலும் சமாளித்து நமக்குச் சாதகமாக அமைத்துக் கொண்டால் நாம் நினைத்ததை அடையலாம் என்று இன்றைய இளைஞர்களுக்கு ஒரு தூண்டுதல் அமையும்படி கமர்ஷியல் கலந்து சொல்லியிருக்கிறேன். என்றார்.