மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். அவரது படத்தை எடுக்க தயாரிப்பாளர்கள் மிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சத், திரிஷா, கவுதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இன்று(மார்ச் 14) இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். காஷ்மீரில் 'லியோ' படப்பிடிப்பில் இருக்கும் அவர் நேற்றிரவு நண்பர்களால் ஏற்பாடு செய்த பார்ட்டியில் பிறந்தநாள் கொண்டாடினார். அதில் விஜய், சஞ்சத் தத், திரிஷா மற்றும் லியோ படக்குழுவினருடன் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
மேலும் திரையுலகினர், ரசிகர்கள் பலரும் லோகேஷிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அவரின் பிறந்தநாள் சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆனது.