நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
2023 - 2026ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் வகையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வருகிற மார்ச் 26ம் தேதி நடக்க இருக்கிறது. இதனை இரண்டு முன்னாள் நீதிபதிகள் தேர்தல் அதிகாரிகளாக இருந்து நடத்த இருக்கிறார்கள். இதில் தற்போது பொறுப்பில் இருக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியினர் போட்டியிடுகிறார்கள். தற்போது இந்த அணியில் இருந்து விலகிய சிலர் தற்போதைய செயலாளர் மன்னன் தலைமையில் 'உரிமை காக்கும் அணி' என்ற பெயரில் புதிய அணி ஒன்றை தொடங்கி உள்ளனர்.
இதில் மன்னனுடன், கமீலா நாசர், பி.எல்.தேனப்பன், கே.எஸ்.சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர். 300 தயாரிப்பாளர்களுக்கு மேல் இந்த அணியில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அணியின் ஆலோசனை கூட்டம் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. விரைவில் யார் யார் எந்தெந்த பதவிக்கு போட்டியிடுகிறார்கள் என்பதை அறிவிக்க இருக்கிறார்கள்.