காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
தமிழில் இந்தியன்-2, ஜெயிலர், லியோ, ஏகே 62 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைக்கும் அனிருத், தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படம் மற்றும் ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கி வரும் ஜவான் படத்திற்கும் இசையமைத்து வருகிறார். ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, பிரியாமணி, சஞ்சய் தத், விஜய் சேதுபதி, யோகி பாபு உட்பட பலர் நடிக்கிறார்கள்.
தமிழ், ஹிந்தியில் தயாராகியுள்ள இப்படம் ஜூன் 2ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு பின்னணி இசையமைக்கும் வேலைகளை தொடங்கியுள்ளார் அனிருத். அவர் கூறுகையில், ‛‛இதுவரை நான் பல படங்களுக்கு பின்னணி இசை அமைத்து இருந்தாலும், இந்த ஜவான் படத்திற்கு கம்போஸ் செய்துள்ள பின்னணி இசை தான் இதுவரை நான் இசையமைத்ததில் சிறந்ததாக இருக்கும். அந்த அளவுக்கு இந்த படத்தின் பின்னணி இசை என்னிடமிருந்து சிறப்பாக வெளிப்பட்டுள்ளது'' என்கிறார் அனிருத்.