ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கர்ணன் படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், பஹத் பாசில், வடிவேலு என ஒரு கமர்சியல் கூட்டணியை வைத்து மாமன்னன் என்கிற படத்தை இயக்கினார் இயக்குனர் மாரி செல்வராஜ். அந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போதே சிறிய பட்ஜெட் படமாக வாழை என்கிற படத்தையும் இயக்கி முடித்து விட்டார். இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிராமத்து சிறுவர்களை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படமும் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் சந்தோஷ் நாராயணன் படத்தை பார்த்து தான் பிரமித்து போனதாக கூறியுள்ளார். சமீபத்தில் மாரி செல்வராஜின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வாழை படம் பார்த்து அப்படியே ஸ்தம்பித்து விட்டேன். ஒரு லைப் டைம் படம் கொடுத்து விட்டோம் என உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள். தொடர்ந்து உங்களது மாயாஜாலங்களால் எங்களை மகிழ்வியுங்கள்” என்று கூறியுள்ளார்.
அதேசமயம் இந்த படம் திரையரங்குகளுக்கு வராமல் நேரடியாகவே ஓடிடி தளத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.